உள்ளங்கவர் ஆசான்

அளவிலா மனிதம்
அஞ்சாத நெஞ்சம்
அயராத உழைப்பு
அசராத உறுதி

சிந்தைகவர் நாடகங்கள்
சிறப்பில்லப் பந்தல்கள்
கவிதை முத்துக்கள்
கவினுறு ஒப்பனைகள்

அழகுக் கலைகளில்
எத்தனை உண்டோ
அத்தனை வகைகளின்
முத்திரை பதித்தாய்

தமிழ்மொழி தன்னை
அமிழ்தாக நேசித்தாய்
இதழ் தந்த இலக்கணம்
இதயம் கவர் இலக்கியம்

ஆன்மீகச் சிந்தனை
ஆழமான நேசம்
புனிதவளன் மேல்
தனியான பாசம்

தோட்டம் செய்வதில்
நாட்டம் அதிகம்
மரங்கள் பூக்களின்
மனங்களோடு பேசுவாய்

இயற்கையை ரசித்தாய்
இசையை ருசித்தாய்
இளைஞரின் சாரதி
இல்லமொரு பாரதி

எல்லோருக்கும் எடுத்துக்காட்டு
நல்வழிப்படுத்தும் ஏடு
வாழ்வாங்கு வாழ்ந்து
வான்மேடு சென்றாய்

என் தமிழுக்கு நீயே
அன்பு அடி போட்டாய்
இன்று கடன் அடைக்க
இப் பாமாலை போட்டேன்


கிளீற்றஸ் துரைசிங்கம்
நெதர்லாந்து
20.12.2010

HOME